சாமி படத்தில் விக்ரம் வயதான கேரக்டரில் நடிக்கிறாரா? வெளியான தகவல்

Report
186Shares

நடிகர் விக்ரம் நடிக்கும் ‘சாமி ஸ்கொயர்’ படத்தில் அவர் வயதான கேரக்டரில் நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது.

2003 ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் ‘சாமி’ படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் “சாமி ஸ்கொயர்’ என்ற தலைப்பில் வெளியாக உள்ளது.

இதில் த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கவுள்ளதாக இருந்த நிலையில் சில காரணங்களால் த்ரிஷா இப்படத்திலிருந்து விலகிவிட்டார். ஆனால் இவருக்கு பதில் வேறு யாரையும் கமிட் செய்யவில்லை.

சமீபத்திய படப்பிடிப்பில் பெருமாள் பிச்சையின் 29வது நினைவு தினம் என போஸ்டர் ஒட்டி படம் எடுக்கப்பட்டது. இதில் பெருமாள் பிச்சையின் மகனாக பாபி சிம்ஹா நடித்து வருகிறார்.

எனவே 29 ஆண்டுகள் கழித்து நடக்கும் கதை என்பதால் இதில் விக்ரம் வயதான கேரக்டரில் நடிக்கிறாரா அல்லது மகன் கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்பது சஸ்பென்ஸாக வைத்திருக்கிறது படக்குழு

6016 total views