சமந்தா கூறிய அதிர்ச்சி தகவல், என்ன இப்படி சொல்லிவிட்டார்

Report
79Shares

நடிகை சமந்தா திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்துவருகிறார். தொடர்ந்து அவர் நடிக்கும் படங்கள் ஹிட்டாகி வருகின்றன.

மெர்சல், ரங்கஸ்தலம், நடிகையர் திலகம் உள்ளிட்ட படங்கள் ஹிட்டாகியுள்ள நிலையில் அவர் அடுத்து பல படங்களில் நடித்துவருகிறார். சீமராஜா, சூப்பர் டீலக்ஸ், யூ-டர்ன் ஆகிய படங்களில் அவர் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் அனைத்து படங்களையும் முடித்துவிட்டு சினிமாவில் இருந்து ஒதுங்க சமந்தா முடிவெடுத்துள்ளார் என்று தெலுங்கு மீடியாக்களில் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அவர் இதற்குமுன் ஒரு பேட்டியில் பேசும்போது, "எனக்கு ஒரு குழந்தை பிறந்தால் அது தான் உலகமாக இருக்கும்" என சமந்தா கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

3608 total views