மலையாள முன்னணி நடிகைகளே எட்டாத இடத்தை அடைந்த பிரியா வாரியர்

Report
198Shares

சிறு கண் அசைவின் மூலம் கிட்டதட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் தான் மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். இவரது முதல் படமான அடார் லவ் படம் இன்னும் வெளியாகாத போதே இவருக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழி படங்கள் வந்து குவிகின்றன.

ஆனால் இவரது முகத்தை சில மாதங்களாகவே சமூக வலைத்தளங்களில் பார்க்க முடியவில்லை. இதற்கு காரணம் அவரது முதல் படத்தில் உள்ள மத உணர்வை பாதிக்கும் அந்த மாணிக்ய மலராய என்ற பாடல் தான். இதனால் இவரது பெயர் கொஞ்சம் டேமஜ் ஆனது.

இருந்தாலும் அவரை தற்போது ஒரு விளம்பர படத்தில் நடிக்க ஒப்பந்தமாக்கியுள்ளனர். இதில் அவருக்கு சம்பளமாக இதுவரை எந்த மலையாள நடிகையும் வாங்காத ரூபாய் 1 கோடி தரப்படுகிறது.

ப்ரியா, இதற்கும் முன்பும் ஒரு முன்னணி கம்பெனியின் விளம்பரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

6856 total views