சமந்தாவின் இந்த வீடியோவை பார்த்தீர்களா..?

Report
378Shares

தெலுங்கு திரையுலகின் பிரபல ஹீரோ நாக சைத்தாயாவிற்கும், நடிகை சமந்தாவிற்கும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் கோவாவில் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடந்தது. இவர்களில் திருமணத்திற்கு 175 பேருக்கு மட்டும் அழைப்பு விடுத்து, 10 கோடி அளவில் செலவழித்து திருமணத்தை நடத்தினார் நாக அர்ஜுனா.

திருமணத்தை தொடர்ந்து தேனிலவிற்காக இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பா நாடுகளுக்கு சென்றனர். அதைத்தொடர்ந்து, பல படங்களில் ஒப்பந்தமாகி சமந்தா நடித்து வருகிறார். இந்த நிலையில், தற்போது அவர் நடித்து முடித்த ரங்கஸ்தலம் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. முதல் டீஸரில் நடிகை சமந்தாவை காட்டவில்லை ராம் சரண் மட்டும் தான் முழு டீஸரிலும் இருப்பார்.

அப்போதே சமந்தாவின் ரசிகர்களுக்கு வருத்தம் ஏற்பட்டது. அந்த வருத்தத்தை போக்கும் விதமாக தற்போது புதிய டீஸர் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த டீஸரில் சமந்தா மட்டும் தான் முழுமையாக தோன்றுகிறார். இந்த படத்தில் சமந்தாவின் கதாபாத்திரம் மிகவும் வித்யாசமான முறையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

14944 total views