அனுஷ்கா ஷர்மாவை தொடர்ந்து அடுத்த திருமணம் யார் திருமணமா..?

Report
298Shares

பாலிவுட் பிரபல நடிகைகள் என்றால் ஞாபகம் வரும் முகங்களில் பிரியங்கா சோப்ராவும் ஒருவர். இவர் பல சவாலான கதாபாத்திரங்களில் நடித்தவர்.

இவர் தமிழில் விஜய்யுடன் ஒரு படமும் நடித்திருக்கிறார். சமீபத்தில் தான் லண்டனை சேர்ந்த ஈஸ்டர்ன் ஐ என்ற வார பத்திரிகை ஆசியாவின் 50 கவர்ச்சியான பெண்களின் பட்டியலை வெளியிட்டது அதில் பிரியங்கா சோப்ரா முதல் இடத்தை பிடித்தார்.

ஹாலிவுட்டிலும், பாலிவுட்டிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார் முன்னாள் உலக அழகியான பிரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட் தொடர்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களது திருமணத்தை தொடர்ந்து பிரியங்கா சோப்ரா திருமணம் செய்ய போவதாக செய்திகள் பரவியது.

இதை கேள்விபட்ட பிரியங்கா சோப்ரா கூறியதாவது: திருமணத்தை நினைத்த உடன் திட்டமிட்டு நடத்த முடியாது.

என் வாழ்க்கைக்கு உரிய ஒருவரை நான் பார்க்க வேண்டும், பழக வேண்டும். அப்படி நான் எனக்கானவரை கண்டுபிடிக்கும் போது நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன். இப்போதைக்கு அப்படி ஒரு நபரை நான் கண்டுபிடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

13361 total views