விஜய் 62 படத்தின் நாயகி யார் தெரியுமா..? வெளியான தகவல்..!

Report
154Shares

விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் உருவாகி மிக பெரிய ஹிட் அடித்த படம் மெர்சல். இந்த படத்தை தொடர்ந்து விஜய் அடுத்து நடிக்கவுள்ள படத்தின் இயக்குனர் எ.ஆர். முருகதாஸ். இது விஜயின் 62 ஆவது படமாகும்.

இந்த படத்தின் நாயகி குறித்து எந்த அதிகாரபூர்வமான தகவலும் வராத நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷ் தான் நாயகியாக நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் கீர்த்தி பைரவா படம் போல் இல்லாமல் வித்யாசமான கதாபாத்திரத்திலும், காஸ்ட்யூமிலும் நடிக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் பாடல்களும் வித்யாசமாக அமையும் என்று படத்தின் இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் காஸ்டியூம் டிசைனர் பல்லவி சிங் என்பதும் குறிப்பிடத்தக்கது. படத்தின் போட்டோஷூட் கூட அண்மையில் தான் நடந்து முடிந்தது.

6316 total views