இளம் சாதனையாளர் விருது பெற்ற நடிகை யார் தெரியுமா?

Report
85Shares

பிரபல செய்தி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக மூன்று வருடங்கள் இருந்து பின்னர் சீரியல் நடிகைகளில் முன்னணியில் இருப்பவர் கல்யாணம் முதல் காதல் வரை புகழ் பிரியா பவானி சங்கர். சின்னத்திரையில் ஒரே ஒரு சீரியலில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை பிரியா.

இந்நிலையில் அவர் கோலிவுட்டில் ஒரு புதிய படம் மூலம் அறிமுகமாக இருப்பதாக கூறப்பட்டது. அதில் வைபவ் ஜோடியாக ‘மேயாத மான்’ படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் அவருடைய நடிப்பு பாராட்டப்பட்டு வருகிறது. அடுத்து, பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

நடிகை பிரியா கடந்த வருடம் மேயாத மான் என்ற ஹிட் படம் கொடுத்து சாதனை படைத்தார். தற்போது அவருக்கு போத்தீஸ் நிறுவனம் இளம் சாதனையாளர் என்ற விருதை அளித்துள்ளது.

இந்த தகவலை அவரே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

3906 total views