நடிகை ஓவியா பற்றி சிவகார்த்திகேயன் கூறிய விஷயம் இதுதானாம்!

Report
114Shares

தனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் என்ற பிரபல நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் மிகுந்த இடத்தை பிடித்தவர் நடிகை ஓவியா. இவரின் பண்பும் குணமுமே அதற்கு காரணம்.

அவர் கூறிய சில விஷயங்களும் விரலாகியது. இவருக்காக பாடல்கள் மற்றும் பல விஷயங்களை மக்கள் செய்து வரவேற்பை கொடுத்தார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் நிறைய விளம்பரங்கள், படங்கள் என கமிட்டானார். சமீபத்தில் கூட காஞ்சனா 3 படத்தில் ஓவியா நாயகியாக நடிக்க கமிட்டாகி நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை ஓவியா குறித்து சிவகார்த்திகேயன் கூறியதாவது: "ஓவியா என் முதல் பட நாயகி. நாங்கள் மெரினா படத்தில் ஒன்றாக நடித்தோம். மெரினா பட வேலைகளில் ஓவியாவின் தாய் எங்களுடன் தான் இருந்தார்.

மேலும், ஒரு முறை நான் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலிருக்கும் போது அவரின் தாய் இறந்துவிட்டதாக செய்தி கேட்டதும் நான் போன் செய்து அவருடன் பேசினேன். அவர் எனது முதல்பட நாயகி அவருடன் இன்னோரு படம் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன்" என்று கூறினார் சிவகார்த்திகேயன்.

5355 total views