தன் சொத்தையெல்லாம் பிரபல நடிகருக்கு எழுதி வைத்துவிட்டு உயிரிழந்த பெண் ரசிகை!

Report
705Shares

ராக்கி என்ற சினிமா மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்தார் சஞ்சய் தத்.அவருடைய தோற்றம், கதைக்கு ஏற்ற வகையில் நடிப்பை வெளிப்படுத்தும் திறமை சஞ்சய் தத்தை, இந்தி திரைப்பட உலகின் அசைக்க முடியாத சக்தியாக மாற்றியிருந்தது.

மேலும் சாஜன் திரைப்படம், அவரது சினிமா வாழ்க்கையில் ஒரு மைல் கல். அந்தளவுக்கு அந்த திரைப்படத்தில் நடிப்பை வெளிப்படுத்தினார். பட்டி தொட்டியெல்லாம் ஓடிய இந்தி திரைப்படம் அது.

அந்த சமயத்தில், மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாய மடைந்தனர்.இந்த வழக்கில், நடிகர் சஞ்சய் தத் மீது குற்றம் சாட்டப்பட்டு. அவர் வீட்டில் சோதனையிட்டதில் ஏ.கே. 56 ரக துப்பாக்கியும், சிறிய ரக கை துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டிருந்தன.

இதனால், அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இருந்த போதிலும், நன்னடத்தை காரணமாக தண்டனை காலம் முடி வதற்கு முன்பாகவே அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

இது ஒருபுறமிருக்க, சஞ்சய் தத்தின் பெண் ரசிகை ஒருவர் தனது பணம் மற்றும் பொருட்களை அவருக்கு உயில் எழுதி வைத்துவிட்டு மரணித்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மலபார் ஹில்ஸ் பகுதியை சேர்ந்த நிஷி ஹரிச்சந்திர என்கிற பெண் தீவிர சஞ்சய் தத் ரசிகராவார். தனது தாயுடன் வசித்து வந்த அவர் நோய் வாய்ப்பட்டு சமீபத்தில் மரணமடைந்தார்.

அவரது வங்கி கணக்கு மற்றும் லாக்கர்களை வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்த போது, வங்கி கணக்கில் இருக்கும் பணம் மற்றும் லாக்கரில் உள்ள அனைத்து பொருட்களும் சஞ்சய் தத்துக்கே சொந்தம் என அவர் உயில் எழுதி வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

இந்த தகவலை அவர்கள் கூற, இப்படி ஒரு ரசிகையா என அதிர்ச்சியடைந்த சஞ்சய் தத், அவரின் அன்பில் நெகிழ்ந்து போனாராம். மேலும், அவரின் பணம் மற்றும் பொருட்களை அப்பெண்ணின் குடும்பத்தினரிடமே கொடுத்து விட ஏற்பாடு செய்துள்ளாராம்.

27938 total views