சன்னி லியோனை வைத்து உருவாகும் ஆவணப்படம்!

Report
12Shares

கவர்ச்சிப் பட நடிகை சன்னி லியோனின் வாழ்க்கை வரலாறு பற்றிய ஆவணப்படம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

‘கரேன்ஜிட் டு சன்னி’ என்ற பெயரில் உருவாகும் இந்த ஆவணப்படத்தில்,

சன்னி லியோனாக எப்படி மாறினார்? ஏன் கனடாவில் இருந்து இந்தியா வந்தார்? அவரின் வாழ்க்கை எப்படிப்பட்டது? போன்ற கேள்விகள் எல்லாவற்றிற்கும் இதில் பதில் கூறப்பட்டுள்ளதாக் தெரிவிக்கபடுகிறது.

ஆவணப்படம் தொடர்பான தகவலை சன்னி லியோன் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இந்த ஆவணப்படத்தை ஜீ .டி.வி தயாரித்துள்ள நிலையில் ஆவணப்படம் குறித்த ஏனைய விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

கவர்ச்சிப் பட நடிகையான சன்னி லியோன் பின்னர் கவர்ச்சி படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு, சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.

ஜெய் நடித்த ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியதன் ஊடாக தமிழ் திரையிலும் அறிமுகமானார்.

தற்போது வடிவுடையான் இயக்கும் ‘வீரமாதேவி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகின்றமை குறிபிடத்தக்கது.

1175 total views