பெண் பார்க்கசென்ற ஆர்யாவுக்கு நடந்த கொடுமை... துரத்தி அனுப்பிய ஊர் மக்கள்!!

Report
210Shares

கும்பகோணத்திருக்கு திருமணத்திற்கு பெண் பார்க்க சென்ற நேரம், அங்குள்ள மகளிர் அமைப்பினரால் சென்னைக்குத் திரும்ப அனுப்பப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலர்ஸ் தொலைக்காட்சி சேனலின் “எங்க வீட்டு மாப்பிள்ளை” என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதன் ஒருபகுதியாக, அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள கும்பகோணத்தைச் சேர்ந்த பெண்ணின் வீட்டுக்கு ஆர்யா செல்வதாக ஏற்பாடு செய்யபட்டிருந்தது. அந்த சமயத்தில் அங்குள்ள மகளிர் அமைப்பினரால் சென்னைக்குத் திரும்ப அனுப்பப்பட்டார்.

மேலும் ஆர்யா மற்றும் படப்பிடிப்புக் குழுவினர் கும்பகோணத்திலுள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில் இதை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த மகளிர் அமைப்பினர் ஹோட்டலின் வாசலில் ஆர்யாவை அந்த ஊரிலிருந்து வெளியேறும்படி கோஷங்கள் எழுப்பியபடி சத்தம்போட்டனர்.

இதனால் நேற்று முழுவதும் திட்டமிட்டபடி அவர்களால் ஷூட்டிங் நடத்த முடியாமல் போனது. இதனையடுத்து, அனைத்துப் பொருள்களையும் பேக்கிங் செய்துகொண்டு சென்னைக்குத் திரும்பிவிட்டனர்.

6353 total views