நயன்தாராவுக்கு ஜோடியான யோகிபாபு! அதிர்ச்சியில் ரசிகர்கள்

Report
288Shares

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாரான விளங்கி வருபவர் நயன்தாரா. இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகின்றார்.

தமிழில் ரஜினி, அஜித், விஜய், சிவகார்த்திகேயன், சூர்யா, சிம்பு, தனுஷ் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார்.

இவர் தற்போது கோலமாவு கோகிலா என்ற படத்தில் நடித்து உள்ளார், இந்த படத்தின் காட்சி ஒன்று இன்று இணையத்தில் வெளியாகி இருந்தது.

அதில் யோகி பாபு நயன்தாராவிடம் காதலை சொல்கிறார், இதனை பார்த்த ரசிகர்கள் நயன்தாராவுக்கு யோகி பாபு ஜோடியா என அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த காட்சியின் மூலம் படத்திற்கு தேவை என்றால் நயன்தாரா தன்னுடைய இமேஜை கூட பார்க்காமல் நடிப்பார் என உறுதி செய்துள்ளார் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

9647 total views