கொழும்பில் நடிகர் அரவிந்த் சாமிக்கு ஏற்பட்ட நிலை!!

Report
141Shares

கொழும்புக்குச் குடும்பத்துடன் சுற்றலா வந்த நடிகர் அரவிந்த் சாமியை , ரசிகர் ஒருவர் அவரது தொப்பையைப் பார்த்து கிண்டலாகப் பேசியுள்ளார். தனது குடும்பத்தின் முன் இதனால் அவமானப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

நடிகர் அரவிந்த்சாமி. படங்களில் நடித்து வந்த அவர் இடையில் சொந்தப் பிரச்சினைகள் காரணமாக சினிமாவை விட்டு விலகியிருந்தார்.

ஆனால், இவரது பெயருக்கும், புகழுக்கும் எந்த குறைவுமில்லாமல் தான் இருந்தது. சினிமாவில் நடிக்காமல் இருந்ததில் உடல் எடை கூடி தொப்பையும், தொந்தியுமாக மாறினார் அரவிந்த் சாமி.

தனது குடும்பத்துடன் கொழும்புக்குச் சுற்றுலா சென்றிருந்த போது உணவகம் ஒன்றில் சாப்பிட சென்றுள்ளனர். அப்போது, அரவிந்த்சாமி மகளிடம் ஒரு நபர் வந்து ” உங்கள் அப்பாவை கொஞ்சமாகச் சாப்பிட சொல்லு ” என்று கூறியுள்ளார்.

இதனால், தனக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், என்னுடைய மகள் சிறியவள். அவள் என்ன நினைத்திருப்பால், அந்தக் காட்சிகளை இப்போதும் என்னால் மறக்க முடியவில்லை என்று வருத்ததுடன் கூறியுள்ளார் அரவிந்த்சாமி.

6078 total views