நெஞ்சுவலியால் துடிதுடித்த நடிகர் மரணம்

Report
492Shares

பாலிவுட் நடிகர் நரேந்திர ஜா இன்று மாரடைப்பால் காலமானார்.

இந்தி தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் ஷாருக்கானின் ரயீஸ், ரித்திக் ரோஷனின் காபில் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளர் நரேந்திர ஜா.

இந்நிலையில் மும்பைக்கு அருகே வாதா பகுதியில் இருக்கும் பண்ணை வீட்டில் தனது மனைவியுடன் ஓய்வு எடுத்து வந்த நிலையில், இன்று காலை மாரடைப்பால் காலமானார்.

55 வயதான நரேந்திர ஜாவுக்கு ஏற்கனவே இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

அவரின் மரண செய்தி அறிந்து பாலிவுட் பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

19337 total views