முன்னழகை காட்டிய பிரபல நடிகை: முகம் சுளித்த ரசிகர்கள்

Report
530Shares

மும்பையில் நடந்த விருதுவிழாவில் கலந்து கொண்ட பிரபல நடிகை தீபிகா படுகோனேவின் உடை ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

ஹலோ ஹால் ஆஃப் ஃபேம் விருதுகள் 2018 நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது, இதில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர், ஷாருக்கான் தனது மனைவி கவுரி கானுடன் வந்திருந்தார்.

பாலிவுட்டின் வெற்றி நாயகியான தீபிகா படுகோனேவின் உடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்த விழாவில் 2017ம் ஆண்டின் சிறந்த என்டர்டெய்னர் விருது தீபிகாவுக்கு கிடைத்தது. இதே விருது ஆண்கள் பிரிவில் தீபிகாவின் காதலரான நடிகர் ரன்வீர் சிங்கிற்கும் கிடைத்துள்ளது.

தீபிகா வெள்ளை நிற கவுன் அணிந்து விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த கவுனின் முன் பக்கத்தை பார்த்த பிரபலங்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

தீபிகா அணிந்து சென்ற கவுன் அழகாக இருந்ததாகவும் எனினும், கொஞ்சம் முன்னழகை மறைத்தது போன்று இருந்திருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும் என ரசிகர்கள் கூறியுள்ளனர்.

இதற்கு முன்னதாக ஹாலிவுட் நடிகர் வின் டீசல் மும்பை வந்தபோது நடந்த நிகழ்ச்சியில் தீபிகா அணிந்திருந்த உடையுடன் ஒப்பிட்டால் இந்த கவுன் எவ்வளவோ பரவாயில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

21552 total views