ஜூலியின் புது படம் கதாபாத்திரம் இது தானா..? லீக்கான தகவல்

Report
397Shares

தனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களின் கடும் கோபத்திற்கு ஆளானவர் ஜூலி.

இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மக்கள் மத்தில் நல்ல வரவேற்பு பெற்றவர். இவர் இந்த நிகழ்ச்சி மூலம் மிகவும் துன்பத்திற்கு ஆளானார்.

ஆனால் இவர் அதை சிறிதும் பொருள்படுத்தாமல் இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி பல படங்களில் நடித்து வருகிறார்.

ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கொண்டும் இருக்கிறார். மேலும், சில படங்களில் நடித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் கூட ஒரு அப்பளம் விளம்பரத்தில் நடித்தார். இவர் தற்போது ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க காமிட்டாகியுள்ளார்.

இவர் நடிக்கும் இந்த படத்தை K7 புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இவருக்கு ஜோடியாக தப்பாட்டம், ஜூலியும் 4 பேரும், போன்ற படங்களில் நடித்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் நடிக்கிறார்.

இந்த படத்தில் ஜூலி அவரது சொந்த பெயரில் தான் நடிக்கிறாராம். கதைப்படி ஜுலி சமூக அக்கறை கொண்ட ஒரு பெண்ணாக நடிப்பதால் அவருக்கு இந்த படத்தின் மூலம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

12422 total views