பாலியல் தொல்லைக்கு ஆளான நிவேதா பெத்துராஜ்...வெளியான அதிர்ச்சி வீடியோ!!

Report
22Shares

ஜம்மு காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது குறித்து பலரும் தங்களது கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாலியல் தொல்லை குறித்து நடிகை நிவேதா பெத்துராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் தானும் சிறுவயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியதாக தெரிவித்துள்ளார்.

பொதுவாக இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல் எல்லாம் நமக்கு தெரிந்த உறவினர்கள், பக்கத்துவீட்டுக்காரர்கள் மூலமாகத் தான் நடக்கும். எனவே எல்லா பெற்றோர்களும் தயவு செய்து பொறுப்புடன் இருங்கள்.

உங்கள் குழந்தையின் முன் அமர்ந்து பேச ஆரம்பியுங்கள். யாரு எப்படி பேசினால் தப்பு எப்படி தொட்டால் தப்பு என இரண்டு வயதில் இருந்தே பேச ஆரம்பியுங்கள். குழந்தைகளுக்கு பள்ளியில் என்ன நடக்கிறது என தெரியாது. டியூசனில் என்ன நடக்கிறது என தெரியாது.ஆகவே அவர்களை பொறுப்புடன் பார்த்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

844 total views