மனைவியிடம் அடிவாங்கிய பாலா!

Report
563Shares

இயக்குனர் பாலா என்றாலே எப்போதும் ஒரு கோபமான முகம் நம் கண்முன் வந்து செல்லும். ஏனெனில் அந்த அளவிற்கு அவருடைய படங்களின் பாதிப்பு ஒவ்வொருவரின் மனதிலும் இருக்கும்.

ஆனால், பாலா தன் குடும்பத்தினருடன் மிக ஜாலியாக தான் இருப்பாராம், இதை அவருடைய மனைவி மலர் சொன்னாலும் யாரும் கேட்பதில்லையாம்.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் பாலா படப்பிடிப்பில் தான் அப்படி இருப்பாராம், மனைவியிடம் அடிக்கூட வாங்கியுள்ளாராம்.

ஒரு முறை விமானத்திற்காக பாலாவும் அவருடைய மனைவியும் காத்திருந்த போது ஒரு பெரியவர், அவர்களை கடந்து சென்றுள்ளார்.

பாலா அவரை பார்த்தும் கால் மேல் போட்டு உட்கார, உடனே கோபமாக அவருடைய மனைவி பாலாவை அடித்துள்ளார், பாலாவும் தன் தவறை தெரிந்துக்கொண்டு ஒன்றுமே சொல்லவில்லையாம்.

இதை பாலாவே சில வருடங்களுக்கு முன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

23324 total views