விஷாலுக்கு திருமணமா? மணமகள் யார்?

Report
379Shares

தென்னிந்திய நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால், சென்னை விமானநிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:சினிமாவில் தான் ரவுடிகள் ஒன்றாக கூடி ஆட்டம்பாட்டத்துடன் பிறந்த நாள் கொண்டாடுவதாக காட்சிகள் வைப்போம்.

அது நிஜத்தில் நடந்திருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. சிறப்பாக செயல்பட்டு அவர்களை கைது செய்த போலீசாரை பாராட்டுகிறேனன். தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும்.மார்ச் 1-ம் தேதி முதல் ஸ்டிரைக் நடப்பது உறுதி. டிஜிட்டல் நிறுவனங்களுடனும் பேசிக் கொண்டிருக்கிறோம்.

பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும் என்ற நம்புகிறோம். ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை அமைய நடிகர் சங்கம் சார்பில் நிதி கொடுப்பது தொடர்பாக ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம்.நடிகர் சங்க கட்டட பணிகள் இந்த ஆண்டு டிசம்பர் மாத்திற்குள் முடிந்து விடும். 2019, ஜனவரியில் திறப்பு விழா நடக்கும், புதிய கட்டிடத்தில் அமைய இருக்கும் திருமண மண்டபத்தில் முதல் திருமணமாக எனது திருமணம் நடக்கும். இதற்காக மண்டபத்தை இப்போதே முன் பதிவு செய்துவிட்டேன். என்றார்.

total views