நடிகர் விக்ரமின் தந்தை காலமானார்!

Report
52Shares

நடிகர் விக்ரமின் தந்தை வினோத் ராஜ். இவருக்கு வயது 80. முன்னாள் இந்திய ராணுவ வீரரான இவர், பல திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். விஜய் நடிப்பில் வெளியான ‘கில்லி’ படத்தில் திரிஷாவிற்கு அப்பாவாக நடித்திருப்பார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர் சில காலமாக படங்களில் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில், நேற்று மாலை 4 மணியளவில் காலமானார். இவரது மறைவு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இவரது இறுதிச் சடங்கு இன்று மாலை நடக்க இருக்கிறது. இறுதி அஞ்சலிக்காக இவரது உடல் கோடம்பாக்கத்தில் உள்ள மகாலிங்கபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

2361 total views