பாபா முத்திரை யாருக்கு சொந்தம்?

Report
32Shares

ரஜினி மக்கள் மன்றத்தின், 'பாபா முத்திரை' சின்னம், தங்கள் நிறுவனத்தின், 'லோகோ'வைப் பார்த்து, காப்பி அடிக்கப்பட்டு உள்ளதாக, மும்பையைச் சேர்ந்த, ஒரு நிறுவனம் கூறியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப் போவதாக சமீபத்தில் அறிவித்ததில் இருந்தே, அவரது, 'பாபா முத்திரை' சின்னமும் பிரபலமாகி வருகிறது.

சின்னம்

அவரது மக்கள் மன்றத்துக்கு கூட, அதையே தான், சின்னமாக பயன்படுத்துகிறார். கடந்த, 2002ல் வெளியான, பாபா திரைப்படத்துக்கு பின், ரஜினி ரசிகர்கள் இந்த சின்னத்தை அதிகம் பயன்படுத்த துவங்கினர். இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த, 'வொக்ஸ்வெப்' என்ற, சமூக ஊடக நிறுவனம், தங்கள் மொபைல் போன், செயலிக்கு, இந்த பாபா முத்திரையை தான், 'லோகோ'வாக வைத்து உள்ளது.

1897 total views