மக்களை அதிகம் கவர்ந்த டாப் 20 பிரபலங்கள் இவர்கள் தான்! பட்டியல் வெளியானது

Report
0Shares

உலக அளவில் மக்களை அதிகம் கவர்ந்த பிரபலங்களின் பட்டியல் வெளியகியுள்ளது.

இதில் ஆண்கள் பிரிவில் பில்கேட்ஸ் மற்றும் பெண்கள் பிரிவில் ஏஞ்சலினா ஜோலி ஆகியோர் முதலிடம் பிடித்துள்ளனர்.

‘யூகோவ்’ என்ற நிறுவனம் உலகளவில் மக்களை மிகவும் கவர்ந்த பிரபலங்களின் பட்டியல் குறித்து ஆன்லைனில் வாக்கெடுப்பு நடத்தியது. இந்த வாக்கெடுப்பில் 35 நாடுகளைச் சேர்ந்த சுமார் 37 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் மக்களை கவர்ந்த 20 ஆண்கள் மற்றும் 20 பெண்கள் அடங்கிய பட்டியல் வெளியிட்டப்பட்டது.

இந்த பட்டியளில் ஆண்கள் பிரிவில் மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டர் நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடம் பிடித்தார். இதுவரை இவர்தான் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

அவரைத் தொடர்ந்து அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா 2-வது இடத்திலும், நடிகர் ஜாக்கிஜான், சீன அதிபர் சி ஜின்பிங் ஆகியோர் முறையே 3-வது மற்றும் 4-வது இடத்திலும் உள்ளனர். சீன தொழிலதிபர் ஜாக் மா 5ம் இடம் பிடித்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் 6ம் இடத்திலும் , இந்திய பிரதமர் மோடி 8ம் இடத்திலும் இந்த பட்டியலில் உள்ளனர்.

பெண்கள் பிரிவில் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி முதலிடம் பிடித்து இருக்கிறார். அவருக்கு அடுத்தப்படியாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செலி ஒபாமா, மற்றும் ஒப்ரா, வின்பிரே ஆகியோர் முறையே 2-வது மற்றும் 3-வது இடம் பெற்றுள்ளனர்.

தீவிரவாதத்துக்கு எதிராக போராடிவரும் பாகிஸ்தானை சேர்ந்த மலாலா 7ம் இடமும் , ஜேர்மனி சான்ஸ்லர் மெர்கல் 8ம் இடமும் இந்த பட்டியளில் பிடித்துள்ளனர்.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா 12-வது இடத்தை பிடித்துள்ளார். இவர் தற்போது ஹாலிவுட் படங்களிலும், அமெரிக்க டி.வி. தொடரிலும் நடித்து பிரபலம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

6802 total views