பல சீரியல்களில் நடித்த பிரபல நடிகைக்கு பொது இடத்தில் நேர்ந்த சோகமான சம்பவம்!

Report
315Shares

தமிழ் சீரியல்கள் தமிழ்நாட்டு மக்களிடையே மிகவும் பரபரப்பாக பேசப்படும் ஒன்று. இதில் பல நடிகைகளுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறார்கள்.

ஆனால் வில்லன், வில்லி கேரக்டரில் நடித்து பிரபலமாகிவிட்டால் பொது இடத்தில் தலை காட்ட முடியாது. ஏன் என அவர்களுக்கே தெரிந்திருக்கும். அவர்களை புகழ் பாடுகிறார்களோ இல்லையோ தூற்றி விடுவார்கள்.

பல சீரியல்களில் நெகட்டிவ் ரோல்களில் நடித்தவர் கௌதமி. வடிவேலுவுடன் நகரம் படத்தில் காமெடியில் நடித்திருந்தார். திருமதி செல்வம் சீரியலில் பாக்கியம் கேரக்டர் இவருக்கு பிரபலத்தை தந்தது.

இந்த சீரியலில் அதே கேரக்டரில் ஏற்கனவே நடித்தவர் வத்சலா. அவர் வெளிநாட்டுக்கு குடிபெயர்ந்துவிட்டதால் கௌதமி நடித்தாராம். இவர் பெரும் சாலையில் டூவீலரில் தான் செல்வாராம்.

அவரை பார்த்து சிலர் பின்னாலேயே துரத்தி வந்து திட்டினார்களாம். மேலும் பாண்டிச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் ஒரு பெரியவர் ஏன் இப்படி செய்கிறாய் என அடிக்க கை ஓங்கிவிட்டாராம்.

பின் கௌதமி எப்படியோ அதிலிருந்து தப்பித்திருக்கிறார்.

10125 total views