MailPrint
நொடித்துப் போன தயாரிப்பாளர் : கை கொடுக்கிறார் விஜய்!
[ Wednesday, 28 July 2010, 02:33.16 PM GMT +05:30 ]
தொடர் தோல்விகள்தான். ஆனால் விஜய்யின் படங்களை 100 நாட்களுக்கு பிறகு ஷிப்ட் முறையில் வாங்குகிற விநியோகஸ்தர்கள் பாடு கொண்டாட்டம்தான் என்கிறது திரையுலக கலெக்ஷன் ரிப்போர்ட்.

அது மட்டுமல்ல, குறிப்பிட்ட சிலரோடு விஜய் இணைந்தால் கோடம்பாக்கத்தில் தங்க மழைதான் என்கிறது அதே ரிப்போர்ட்! அந்த குறிப்பிட்ட சிலரில் இருக்கிறார் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம். ஆனாலும், அகல கால் வைத்ததால் அதல பாதாளத்தில் தள்ளிவிட்டது வட்டியும், நஷ்டமும்! ஒரு படத்திற்கே பத்து கோடி வட்டி கட்டியவர் என்று சமீபத்தில் ஒரு விழாவில் புகழ்ந்து(?) தள்ளினார்கள் இவரை. விஜய்யும் இவரும் இணைந்த 'கில்லி' திரைப்படம் தமிழ் பட வரலாற்றில் மைல் கல் மட்டுமல்ல, மாற்றவே முடியாத கல்வெட்டும் கூட.

நொடித்துப் போயிருக்கும் ரத்னத்திற்கு மீண்டும் கைகொடுக்க முன் வந்திருக்கிறாராம் விஜய். வெகு விரைவில் இவர்கள் காம்பினேஷன் பற்றிய அறிவிப்பு வரப்போகிறது. அதற்கு முன்பாக விஜய்யிடம் கதை சொல்ல நல்ல இயக்குனர்கள் சிலரை அனுப்பி வைத்தாராம் ரத்னம். இப்படி போன மூன்று பேருமே விஜய்யின் ஹிட் அண்டு குட் லிஸ்ட்டில் இடம் பிடிக்க முடியாமல் திரும்பியதாக 'உச்' கொட்டுகிறது ரத்ன வட்டாரம்.
கடைசியாக போய் திரும்பியவர் 'யாவரும் நலம்' பட இயக்குனர் விக்ரம் குமார்தானாம். விட்டால் இப்படிதான் அலுத்துக் கொள்வார் போலிருக்கிறது. "யாவரும் சுய நலம்!"