MailPrint
மீண்டும் வந்தார் மதுபாலா...!
[ Monday, 26 July 2010, 07:24.25 PM GMT +05:30 ]
ரோஜா பாடத்தில் நடித்தவர் மதுபாலா. அத்தனை சீக்கிரமாக அவரை யாரும் மறந்து விட முடியாது. ஆனால், அவர்தான் எஸ்கேப் ஆகிப் போனார்.

மீண்டும் இப்போது முகம் காட்ட வருகிறார் மதுபாலா. பெரிய திரையில் அல்ல, சின்னத்திரையில். ஜெயா டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் ‘சவுந்தரவல்லி’ என்னும் தொடரில் மதுபாலாதான் கதையின் நாயகி.

இந்த கேரக்டரை சில பழைய நடிகைகளிடம் சொல்லி கால்ஷீட் கேட்டிருக்கிறார்கள். ஆனால் அந்த கேரக்டரைப் பற்றி இயக்குநர் சொன்னது நடிகைகள் ஓட்டம் பிடித்தார்களாம். அப்படி என்ன கேரக்டர் என்கிறீர்களா...? தாசி வேடம்தானாம். தாசி வேடத்தில்தான் நடிக்கிறார் மதுபாலா.

தாசி குடும்பத்துக்கும் அய்யர் குடும்பத்துக்கும் நடக்கும் பிரச்சனைகளே தொடரின் கதையாம்.