கொரில்லாவாக மாறும் ஜீவா

Report
56Shares

நடிகர் ஜீவா தற்போது கலகலப்பு-2, கீ போன்ற படங்களில் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக அவர் நடிக்கும் படத்திற்கு ’கொரில்லா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கலகலப்பு-2 படத்தை முடித்த ஜீவா தற்போது காலீஸ் இயக்கத்தில் ’கீ’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஜீவாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. டான் சாண்டி இயக்கும் இந்த படத்தில் ஜீவா ஜோடியாக அர்ஜுன் ரெட்டி புகழ் ஷாலினி பாண்டே நடிக்கிறார்.

திருட்டு சம்பந்தப்பட்ட காமெடி த்ரில்லர் ஜேனரில் ஜீவாவின் 29வது படமாக இந்த படம் உருவாகிறது. இதற்கு ’விக்ரம் வேதா' புகழ் சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் விஷயம் ஒன்றும் இடம்பெறுவதாக இயக்குநர் கூறியிருக்கிறார்.

ஆர்.ஜே.பாலாஜி மற்றும் யோகி பாபு இணைந்து காமெடியில் கலக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், இந்த படத்திற்கு ’கொரில்லா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை

2877 total views