விஜய் இவ்வளவு பெரிய ஆளாகியிருக்க முடியுமா? நாங்க தான் காரணமே

Report
44Shares

நடிகர் விஜய் இப்போது இவ்வளவு பெரிய ஆளானதுக்கு திரையரங்கம் மற்றும் உரிமையாளர்கள் தான் காரணம் என திரையரங்க சங்கதலைவர் பேச்சு.

நடிகர் மொட்டை ராஜேந்திரன் மற்றும் நடிகை விஜய்டிவி வைஷாலினி நடித்துள்ள படம்’ஆறாம் திணை’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது.

இதில் கே.பாக்கியராஜ், திரையரங்கு சங்க தலைவர் அபிராமி ராமநாதன் என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

பொன்ராஜ் பேசும்போது சின்ன திரைப்படங்கள் சாவதற்கு திரையரங்குகளே காரணம் என கூறினார்.

அதன்பின் பேசிய திரையரங்கு சங்க தலைவர் அபிராமி ராமநாதன் கூறுகையில், கடந்த வருடம் நான் பண்ண 50 படங்களில் 45 படம் சின்ன படம் தான்.

மேலும் விஜய் பெரிய ஹீரோவாக இருந்தாலும் அவர் முதன்முதலா நடித்தபோது அது சின்ன படம் தான்.

எங்களை போன்ற தியேட்டர்காரர்கள் சின்ன படம் என அதை புறக்கணித்திருந்தால் அவர் இன்று இந்த அளவிற்கு வளர்ந்திருக்க முடியுமா..? என கேட்டார்.

2038 total views