பூணூல் குறித்து கமல் மிரட்டல் பதில், செம்ம வரவேற்பு பெற்ற கருத்து

Report
284Shares

கமலின் பேச்சுக்கள் மட்டுமின்றி அவரது செயல்பாடுகளும் ஆக்க பூர்வமாகவே இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இதனாலயே அவரது அரசியல் பிரவேசத்தை அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் அரசியலில் பிரவேசம் செய்தார், கமல். மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி ஆளும் கட்சிக்கு எதிரான தனது கருத்துகளை யாருக்கும் அஞ்சாமல் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.

இதனால் அவரது கட்சியில் ஆட்கள் இணைவது அதிகரித்தவாறே உள்ளது. இந்நிலையில் இருதினங்களுக்கு முன்பு மக்களின் கருத்துக்கு பதிலளிக்க வணக்கம் டிவிட்டர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அந்நிகழ்ச்சியில் ஒரு சில கேள்விகளுக்கே பதில் அளித்தார்.

இதையடுத்து இன்று மீண்டும் தனது டிவிட்டர் பக்கத்தில் மக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில் ரசிகர் ஒருவர் கேட்ட,’ஜாதி, மதத்தை ஒழிக்க என்ன செய்ய போகிறீர்கள்’ என்ற கேள்விக்கு, ‘எனது இரு மகள்களையும் பள்ளியில் சேர்த்த போது ஜாதி, மதத்தை குறிப்பிடவில்லை. இதுதான் ஜாதி, மதத்தை ஒழிக்க ஒரே வழி. இதை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும், கேரளா இதை அமல்படுத்திவிட்டது. இது நிச்சயம் பாராட்ட வேண்டிய விஷயம்.’ என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மற்றொருவர் கேட்ட, ’ நீங்கள் படித்த நூலில் உங்களை மிகவும் பாதித்த நூல் எது?’ என்ற கேள்விக்கு, பூணூல் எனவும் அதனாலயே அதை நான் தவிர்த்தேன் எனவும் பதிவிட்டுள்ளார்.

8790 total views