அஜித்திடம் இவ்வளவு திறமைகள் உள்ளதா? பிரம்மித்து போன படக்குழு

Report
18Shares

அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம் என தொடர்ந்து நாலாவது படமாக விஸ்வாசம் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார்.

பல மாதங்களாக எடுக்கப்பட்டு வந்த இப்படம் தயாரிப்பாளர் சங்கத்தின் வேலை நிறுத்தத்தின் காரணமாக தீபாவளிக்கு வராமால் பொங்கல் விருந்தாக திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இந்நிலையில் அஜித் படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவுக்கு ஆச்சிரியங்களை அளித்துக் கொண்டிருக்கிறார். அதாவது, அஜித் பைக், கார் போன்றவற்றை ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் உடையவர் என்பது அனைவரும் அறிந்ததே.சில சமயங்களில் அதையும் தாண்டி ஆளில்லா விமானங்களையும் இயக்கியும் ஆச்சிரியமுட்டுகிறார்.

தற்போது அவரது ஆர்வம் இதையெல்லாம் கடந்து புகை பட கலையின் மீது திரும்பியுள்ளது. படப்பிடிப்பில் அஜித் பார்க்கும் இடமெல்லாம் கேமிராவுடன் தான் வலம் வருகிறாராம்.அதைப்போல் பார்ப்போரையெல்லாம் படம் பிடித்து அவர்களுக்கு பரிசாக வழங்கி விடுகிறார். அதுபோலதான் தற்போது நயன்தாராவை படம் பிடித்து அதை அவருக்கு வழங்கி பிரம்மிக்க வைத்துள்ளார்.

1112 total views