ரஜினிக்கு அவமானத்திற்கு மேல் அவமானம், தேவையா இது?

Report
102Shares

ரஜினிகாந்த் இன்று இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரம். ஆனால், சமீப காலமாக இவர் மிகவும் மோசமான அனுபவங்களை தான் சந்தித்து வருகின்றார்.

இதில் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் கோச்சடையான் படத்திற்கு பைனான்ஸ் செய்த நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை உடனே செலுத்தவேண்டும் இல்லையென்றால் சிறைக்கு செல்லவேண்டியிருக்கும் என கோர்ட் தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோச்சடையான் படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிக்காக 10 கோடி ருபாய் கடனாக வாங்கியுள்ளார். அதை திரும்ப செலுத்துவது தொடர்பான வழக்கு நீண்ட நாட்களாக நடந்து வருகிறது.

செலுத்தவேண்டிய 6.20 கோடி ரூபாயை உடனே செலுத்தவேண்டும் என கோர்ட் உத்தரவிட்ட பிறகும் செலுத்தாததால் உச்சநீதிமன்றம் அவரை எச்சரித்துள்ளது.

4056 total views