பிரபல நடிகர் மாதவன் மீது வழக்கு! மிரட்டல் விட்டு அதிர்ச்சியாக்கிய முக்கிய இசையமைப்பாளர்

Report
303Shares

மேடி மேடி என பலரும் சொல்லக்கேட்டிருப்பீர்கள். அது வேறு யாருமல்ல. இந்த நடிகர் மாதவன் தான். பிளே பாய் போல ரொமான்ஸ் ஹீரோவாக திகழ்ந்தவர்.

அவர் தற்போது இஸ்ரோவை சேர்ந்த முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கவுள்ளார். இதில் அவர் தான் நம்பியாக நடிக்கிறார். அண்மையில் இப்படத்தின் ஸ்பெஷல் ட்ரைலர் வெளியானது. தற்போது இப்படத்தின் கதை விசயத்தில் சர்ச்சை எழுந்துள்ளது.

தற்போது இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் என்பவர் இப்படத்தின் கதை தன்னிடம் இருப்பதாகவும், தன்னுடைய அனுமதியில்லாமல் படம் எடுக்கக்கூடாது என கூறியுள்ளார்.

இவர் பூ, களவாணி என சில படங்களுக்கு இசையமைத்தவர். தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் மனு அளித்துள்ளார். இதில் 20 ஆண்டுகளுக்கு முன்பு நம்பி நாராயணன் வாழ்க்கை கதையை தொலைக்காட்சி தொடராக தயாரித்தேன். ஆனால் சில சட்ட பிரச்சினைகளால் அது வெளியாகவில்லை.

இதனால் எனக்கு பெரிய அளிவில் நஷ்டம் ஏற்பட்டது. எனது நிலையை மாதவனிடம் தெரிவித்தபிறகும் அவர் பிடிவாதமாக படத்தின் தொடக்க விழாவை நடத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது.

எனது அனுமதி இல்லாமல் நம்பி நாராயணன் வாழ்க்கையை படமாக்க கூடாது. எனவே மாதவன் மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன் என அவர் கூறியுள்ளார்.

10713 total views