உலககோப்பை அரையிறுதியில் போராடி வீழ்ந்தது இந்தியா- சினிமா பிரபலங்களின் கருத்துகள்...

Report
27Shares

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றில் இந்திய அணியும் நியூசிலாந்த் அணியும் மோதின. நேற்று தொடங்கிய இப்போட்டியில் நியூசிலாந்த் 46.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்தது.

அப்போது மழை குறுக்கிட்டதால் பாதியில் ஆட்டம் நிறுத்தப்பட்டு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று ஆட்டத்தை தொடங்கிய நியூசிலாந்த் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்தது.

இதைத்தொடர்ந்து 240 ரன்களை இலக்காக கொண்டு ஆட தொடங்கிய இந்திய அணி மளமள வென விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்ப இறுதியில் 49.3 ஓவர்களுக்கு 221 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

கடைசி கட்டத்தில் மிகவும் போராடிய தோனி, ஜடஜாவின் ஆட்டம் வீண் ஆனது. இந்தியாவையே சோகத்தில் மூழ்கடித்திருக்கும் இத்தோல்விக்கு சினிமா பிரபலங்கள் கூறும் கருத்துகள்...1958 total views