காமெடி நடிகர் வடிவேலு தலைமறைவு! ரகளை செய்த கும்பல்! உண்மை இதோ

Report
203Shares

காமெடி நடிகர் வடிவேலு தமிழ் மக்களால் மிகவும் மறக்க முடியாத ஒரு நபராகி விட்டார். தான் உடல் மொழி, பேச்சால் மக்களின் மனதை ஈர்த்துவிட்டார். சில பிரச்சனைகள், சர்ச்சைகளுக்கு பிறகு அவர் மீண்டும் கமல்ஹாசன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வருகிறார்.

சமீபத்தில் அவரின் உதவியாளர் மணிகண்டன் என்பவர் மீது வடிவேலு நடித்த எலி படத்தின் தயாரிப்பாளர் சதீஷ் என்பவர் மதுரை காவல் நிலையத்தில் திருந்தார்.

இதில் தான் சென்னை சென்றிருந்த போது வடிவேலுவின் உதவியாளர் மணிகண்டன் தன் வீட்டில் புகுந்து ரகளை செய்ததாக கூறியுள்ளார்.

மேலும் தன்னுடைய மேலாளர் கோவிந்தராஜ் என்பவரை அவர்கள் தாக்கியதாகவும் கூறியுள்ளார். சிசிடிவி ஆதாரத்தையும் சதீஷ் போலிசிடம் கொடுத்துள்ளார். இதனால் காவல்துறை மணிகண்டன் மற்றும் அவருடன் சென்ற 2 நபரையும் தேடி வருகிறார்களாம். வழக்கினால் வடிவேலு தலைமறைவானதாகவும் தகவல் பரவியது.

இந்நிலையில் வடிவேலுவை செய்தி ஊடகம் ஒன்று தொடர்பு கொண்ட போது அவர் தான் மீண்டும் படங்களில் நடிக்க இருக்கிறேன், என்னுடைய எதிர்காலத்தை வீணாக்கும் விதமாக சிலர் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்கள்.

நான் தலைமறைவாகவில்லை, கடந்த செவ்வாய்க்கிழமை குலதெய்வம் கோவிலுக்கு சென்றிருந்ததாக அவர் கூறியுள்ளார்.