"பிகில் படத்தில் நடித்ததற்காக என்னைத் திட்டினார்கள்" - ஆனந்த் ராஜ்.. அட்லீ இப்படிச் செய்திருக்கக் கூடாது..

Report
461Shares

கடந்த வருடம் விஜய் நடிப்பில் தீபாவளி அன்று வெளியான "பிகில்" ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளியான திரைப்படம் "பிகில்". இப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்தது எனச் செய்தி வெளியாகின.

இந்நிலையில் அப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஆனந்த் ராஜ் நேர்காணல் நிகழ்ச்சில் ஒன்றில் பிகில் திரைப்படத்தைப் பற்றி சர்ச்சைக்குரிய விதமாகப் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அவர் பேசியதாவது : " நான் "பிகில்" படத்தை இன்னும் பார்க்கவில்லை, இந்த படத்தில் விஜய் பாராட்ட கூடிய வகையில் நடித்துள்ளார், எனவே அவரை விமர்சித்தவர்களை நான் தட்டி கேட்டேன். அந்த படத்தில் நான் நடித்த காட்சிகளைப் படத்தின் நீளம் கருதி நீக்கிவிட்டார்கள், அது எனக்கு மிகுந்த வலியைத் தந்தது. மேலும் இப்படத்தில் நடித்ததற்காக என்னைத் திட்டினார்கள். அதை ஏற்றுக் கொண்டு நான் மன்னிப்பு கேட்டேன்" என்று வெளிப்படையாகத் தனது கருத்துக்களைக் கூறியுள்ளார்.