செல்பி எடுக்கமுயன்ற ரசிகரிடம் மோசமாக நடந்துகொண்ட சல்மான் கான்.. வைரலான வீடியோ..

Report
71Shares

இப்போதெல்லாம் பிரபலங்களிடம் ரசிகர்கள் செல்பி எடுத்துக்கொள்வது வழக்கமாகி விட்டது. ஆனால் ஒரு சில பிரபலங்களுக்கு அது பிடிக்கலாம் தட்டிவிட்டு செல்வதும் உண்டு. அதேபோல் நடிகர் சிவகுமாருடன் ரசிகர் ஒருவர் செல்பி எடுக்கமுயன்று தட்டிவிட்டு சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கான் தனது படத்தின் படப்பிடிப்பிற்காக கோவா சென்றுள்ளார். கோவா விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தபோது அவரின் ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயன்றுள்ளார்.

இதனால் கோபமடைந்த சல்மான் கான் அவரின் செல்போனை பிடிங்கி சென்றுள்ளார். திரைத்துறையில் பெரிய நடிகரான இவர் இதுபோன்று நடந்து கொண்டதால் பலரும் விமர்சித்து வருகின்றனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.