முகத்தில் முகமூடியுடன் வெளியே வந்த நடிகர் விஜய், இணையத்தளத்தில் வைரலாகும் புகைப்படம்..

Report
220Shares

தளபதி விஜய் தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர், இவரின் திரைப்படங்கள் வெளியானால் திரையரங்கமே திருவிழா போல் காட்சியளிக்கும்,

இவர் நடிப்பில் வெளியான மெர்சல், சர்கார், பிகில் உள்ளிட்ட திரைரையுப்படங்கள் மிக பெரிய வசூல் சாதனைகளை செய்தது, குறிப்பாக கடந்த வருடம் வெளியான பிகில் திரைப்படம் 300 கோடிக்கும் மேல் வசூலை குவித்துள்ளது என கூறப்படுகிறது.

மேலும், நடிகர் ரஜினிக்கு அடுத்தபடியாக இவரின் திரைப்படங்களே மிக பிரம்மாண்டமாக உலக அளவில் அதிக திரையரங்குகளில் வெளியாகும்.

தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் மாஸ்டர், இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகுமேன அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் அச்சுருத்தலால் இந்த படம் வெளியாது கேள்வி குறியே.

மேலும், சமுக வலைத்தளங்களில் இவருக்கு மிகவும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். நடிகர் விஜய் குறித்து எந்த செய்தி வெளியானலும் அதை இந்திய அளவில் டிரண்டாகி விடுவார்கள்.

அந்த வகையில் நடிகர் விஜய் முகத்தில் முகமூடி அணிந்தபடி காரில் ஏறும் புகைப்படம் தற்போது சமுக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

மேலும், அந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என தெரியவில்லை, ஆனால் அவரின் ரசிகர்கள் அதை வைத்துகொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.