தல வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்! போலிசார் வெளியிட்ட தகவல்

Report
287Shares

தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து நடிகர் அஜித் குறித்த விசயங்கள் சமூகவலைதளங்களில் மிக விரைவாக சென்று அனைவரையும் பேச வைக்கும் செய்தியாக மாறிவிடும். பெருமளவிலான ரசிகர்கள் கூட்டம் அவருக்கு இருக்கிறது.

கொரோனா முழுமையாக நீங்கிய பின்பே தான் நடித்து வந்த வலிமை படத்தின் படப்பிடிப்புகளை தொடங்க வேண்டும் என்பது அவரின் எண்ணம்.

இயக்குனரும், தயாரிப்பாளரும் அப்படியே விரும்புகிறார்கள். படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் குடும்பத்துடன் தற்போது நேரம் செல்வழித்து வருகிறார். இந்நிலையில் சென்னை, நீலாங்கரையில் உள்ள அவரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .இந்நிலையில் போலிசார் மோப்ப நாய் உதவியுடன் சோதனையிட்டு வெடிகுண்டு எதுவும் இல்லாததால் இது வதந்தி என தெரிவித்துள்ளனர்.