பிரபல நடிகையின் கணவர் தற்கொலை! இளம் நடிகருக்கு நேர்ந்த பரிதாபம் - திடுக்கிடவைத்த சம்பவம்

Report
71Shares

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாடு முழுக்க பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியது. அவரின் மரணம் குறித்து பல விவாதங்களும் சர்ச்சைகளும் எழுந்தன. ஆனால் இறுதியில் மனஅழுத்தமே காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது பாலிவுட் சினிமாவை சேர்ந்த இளம் நடிகர்ஆஷூடோஷ் பாக்ரே தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மராத்தியில் பல படங்களில் நடித்து வந்த இவர் சக சினிமாவை சேர்ந்த நடிகையான மயூரி தேஷ்முக் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் அவர் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், தற்கொலை குறித்த பதிவையும் அவர் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.