நிரோத் யூஸ் பண்றது எதுக்கு?பலூன் மாதிரி பறக்கவிடுறதுக்கா! நடிகர் வெளியிட்ட சர்ச்சை வீடியோ

Report
14Shares

நடிகர் பார்த்திபன் சமூக சிந்தனையாளர் என்பது அவரின் மேடை பேச்சுகளும், படமும், எழுத்து படைப்புகளும் பிரதிபலிக்கும். படங்களிலும் சமூக அவலங்களை வெளிச்சமிட்டு காட்டும் அவரின் ஒத்த செருப்பு பட நினைவுகள் பலரின் மனதை விட்டு அகலவில்லை.

பிறந்த குழந்தைகளை சாலையோரங்கள் வீசிச்செல்லும் அவலம் இன்னும் நீடித்து வருகிறது. எத்தனையோ விழிப்புணர்வு பறை சாற்றப்பட்டு வந்தாலும் இன்னும் சிலர் மாறாதிருப்பது வருத்தத்திற்கு குரியதாகிறது.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் பார்த்திபன் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.

சாலையோரத்தில் பையில் மூட்டை முடிச்சு போல கட்டப்பட்டு கிடந்த பிறந்த குழந்தை குறித்து அவர் நிரோத் உபயோகியுங்கள்,

நிரோத் உபயோகியுங்கள்

நிரோத் உபயோகியுங்கள்-ன்னு ரேடியோவுல டீவியில விளம்பரப் படுத்துறாங்களே எதுக்கு?பலூன் ஊதிப் பறக்க விட்றதுக்கா?இந்த மாதிரி அனாதைகள் உருவாகாம இருக்கத்தான்!1989-புதிய பாதை வசனம்-பழசாகாம இன்னமும் பச்சக் குழந்தையாட்டம் ரத்தமும் சதையுமா கிடக்கு என வறுத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.