#ShameOnVijaySethupathi - ட்விட்டரில் நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக ட்ரெண்டாகும் ஹேஷ்டேக், 800 திரைப்படத்திற்கு சோதனை..

Report
20Shares

நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவின் முன்னனி நடிகராக விளங்குபவர், அதுமட்டுமின்றி மிக சிறந்த நடிகராகவும் வளம் வருபவர்.

இவர் நடிப்பில் சமீபத்தில் OTT-யில் வெளியான திரைப்படம் க.பெ.ரணசிங்கம் சிறந்த விமர்சனங்களை பெற்ற இப்படம் வசூலில் புதிய சாதனைகள் படைத்தது வருகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி இலங்கை கிரிக்கெட் அணியின் வீரரான முத்தையா முரளிதரன் வாழக்கை வரலாற்று திரைப்படமான 800-ல் நடிக்கவுள்ளார். இப்படம் குறித்து மோஷன் போஸ்ட்டர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் தற்போது நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக #ShameOnVijaySethupathi என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இது குறித்த ஹேஷ்டேக்கில் ரசிகர்கள் ‘ இனப்படுகொலையில் ஈடுபட்ட இலங்கை ராணுவ வீரர்களின் கோடியை அணிந்து கொண்டு நடிகர் விஜய் சேதுபதி அப்படத்தில் நடிக்க கூடாது’ என பதிவிட்டு வருகின்றனர்.