நயன்தாராவை கழட்டி விட்டது ஏன்.. லவ் பிரேக்கப் பற்றி பேசிய நடிகர் சிம்பு

Report
720Shares

காதல் ஜோடிகளின் பிரிவை தமிழ் சினிமா மட்டுமல்ல திரையுலகமே பல முறை கண்டுள்ளது. அதில் தமிழ் திரையுலகில் பல விதமான சர்ச்சைக்குள் சிக்கிய காதல் ஜோடிகள், நடிகர் சிம்பு மற்றும் நடிகை நயன்தாரா.

இவர்கள் இருவரும் வல்லவன் திரைப்படத்தில் இருந்தே காதலிக்க துவங்கினார்கள். ஆம் அப்போது இவரும் இணைந்து எடுத்துக்கொண்ட பிரைவேட் முத்தக்காட்சி புகைப்படங்கள் வெளியாகி பல சர்ச்சையில் சிக்கியது.

ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இந்நிலையில் நயன்தாராவுடன் தனக்கு ஏற்பட்ட காதல் முறிவை குறித்து சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் சிம்பு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

சிம்பு கூறியது :

" இருவரும் காதலித்தோம், ஆனால் எதோ ஒரு சூழ்நிலை காரணமாக பிரிந்து விட்டோம். அதன்பின் நாங்கள் இருவருமே நல்ல நண்பர்களாக இருந்து வருகிறோம். நான் நயன்தாராவை மட்டும் காதலிக்கவில்லை, அதற்கு முன் பல பேரை காதலித்த இருக்கிறேன் " என கூறியுள்ளார்.

நயன்தாராவுடன் காதல் முறிவிற்கு பிறகு இருவரும் இணைந்து பாண்டிராஜ் இயக்கத்தில் 'இது நம்ம ஆளு' படத்தில் ஜோடிகளாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.