ரஜினி, விஜய்யுடன் நடித்த நடிகர் மரணம்! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்

Report
23Shares

பல மாதங்களுக்கு பின் கொரோனா தணிந்துள்ள தற்சமயத்தில் தான் சினிமா மீண்டு எழுந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா மறுவடிவம் எடுத்து இரண்டாம் அலையாக பரவி வருவது சற்று பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

2021 பிறந்துவிட்டது. வரும் பண்டிகை காலங்களில் வெளியாக போகும் பிரபல நடிகரின்களின் படங்களை நம்பி தியேட்டர்களும், படத்தயாரிப்பு நிறுவனங்களும் இருக்கின்றன.

கொரோனா காலகட்டத்தில் சினிமா பிரமுகர்கள் பலர் இறந்துள்ளனர்.

தமிழில் ரஜினியுடன் பாஷா விஜய்யுடன் குருவி, விக்ரமுடன் ராஜ பாட்டை, விஷாலுடன் பூஜை ஆகிய படங்களில் நடித்த தெலுங்கு சினிமா நடிகர் நர்சிங் யாதவ் சிறுநீரக் கோளாறால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ஹைதராபாத் மருத்துவமனையில் நேற்று உயிரிந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஹிந்தி, கன்னடம், தமிழ் என 300 படங்களுக்கு மேல் நடித்த அவருக்குவயது 57. அவரின் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.