நடிகர் மாதவனை மது பழக்கம் உடையவர் என விமர்சித்த ரசிகர் - பதிலடியாக மாதவன் கூறியது என்ன தெரியுமா?

Report
13Shares

நடிகர் மாதவன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருபவர், தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் மிக சிறந்த படைப்புகளாக உள்ளது.

அந்த வகையில் தற்போது இவர் மலையாளத்தில் ஹிட்டான சார்லி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான மாறா திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நடிகர் மாதவன் பாலிவுட் நடிகர் அமித்சாத் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு உள்ளார், அந்த பதிவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்த நிலையில் ஒரு ரசிகர் மட்டும் மாதவனை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

ஆம், அவர் "ஒரு காலத்தில் இந்தி திரையுலகில் மாதவன் நுழைந்த போது எனது விருப்பத்திற்குரிய நடிகராக அவர் இருந்தார். அவரை நான் மிகவும் ரசித்தேன். ஆனால் இப்போது அவர் கண்களையும் முகத்தையும் பார்க்கும்போது, அவர் மதுப்பழக்கத்தால் தன்னைத்தானே அழித்துக் கொண்டிருப்பது போல் தெரிகிறது.

மேலும் அவருடைய சினிமா வாழ்க்கையையும் ஆரோக்கியத்தையும் போதை பழக்கத்தால் அழித்து கொள்வதை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள மாதவன், "இதையெல்லாம் நீங்கள் கண்டுபிடித்து உள்ளீர்களா? உங்கள் பெற்றோரை நினைக்கும்போது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. தயவுசெய்து நீங்கள் ஒரு நல்ல மருத்துவரை அவசியம் பார்க்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.