பிரபல நடிகை கஸ்தூரியை அசிங்கமான வார்த்தையால் திட்டிய இளைஞர்! என்ன சொன்னார் தெரியுமா

Report
485Shares

நடிகை கஸ்தூரியை தெரியாதவர்கள் இருக்கமுடியாது. அண்மைகாலமாக இவர் சமூக வலைதளங்களில் தமிழ்நாட்டு அரசியல் பற்றி பேசி சர்ச்சைகளை பேசி வந்தார்.

சில தொலைக்காட்சி விவாதங்களிலும் கலந்துகொண்டு பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். சமீபத்தில் தமிழ் படம் 2.0 படத்தின் டீசர் வெளியானது. இதில் ஓ.பி.எஸ் பதவியேற்றது, விஜய், அஜித் என முக்கிய நடிகர்களின் படங்களில் சில காட்சிகளை கலாய்த்திருந்தனர்.

மேலும் நடிகை கஸ்தூரி ஒரு ஐட்டம் பாடலுக்கும் நடனமாடுவது போல இருந்தது. இந்நிலையில் ஏற்கனவே ஒருவர் பொறுப்பான அம்மாவான பிறகு ஐட்டம் பாடல் எதற்கு என கேள்வி கேட்டிருந்தார்.

அதற்கு கஸ்தூரி திருமணமாகி அப்பாவான நடிகர்கள் கூட முத்தக்காட்சி, ரொமான்ஸ் செய்வது என இருந்து வருகிறார்கள். அவர்களை நாம் கேள்வி கேட்கிறோமா? என பதிலடி கொடுத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது கஸ்தூரியை ஒருவர் ஐட்டம் (விபச்சாரி) என விமர்சித்திருந்தார். இதனால் கோபமான கஸ்தூரி செத்திரு என அந்த இளைஞரை திட்டியுள்ளார்

18218 total views