அனுஷ்காவை இப்படி செய்து விட்டாரே அந்த இயக்குனர்!

Report
289Shares

அனுஷ்கா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். பாகுபலி அவருக்கு மேலும் புகழை தேடித் தந்தாலும் இஞ்சி இடுப்பழகி படம் அவரது சினிமா பயணத்தில் சிறிது வேகத்தடையாக அமைந்தது.

அந்த படத்தில் குண்டாக மாறிய அனுஷ்கா மறுபடியும் தனது பழைய நிலையை அடைய பல மாதங்களாகின. இருந்தாலும் அவருக்கு வருகின்ற பட வாய்ப்புகளின் எண்ணிக்கை குறையவில்லை. ஆனால் அவர் காத்திருந்தது ஸ்டைலிஷ் டைரக்டர் என வர்ணிக்கப்படும் கவுதம் மேனனின் அழைப்புகாக தான்.

அனுஷ்கா கடைசியாக நடித்த பாகமதி படம் பிப்ரவரி மாதம் வெளியானது. அதன் பிறகு அவரது கல்யாண பேச்சுகள் எழுந்தன. ஆனால் அத்தகைய சம்பவங்கள் எதுவும் நடைப்பெறாமல் கவுதம் மேனன் படத்தில் ஒப்பந்தமானார்.

ஆனால் கவுதமோ துருவ நட்சத்திரம், ENPT என பிஸியானார். பொறுத்து பொறுத்து பார்த்த அனுஷ்கா காத்திருந்த நாட்களில் அவரிடம் கதை சொன்ன இயக்குனர்களை தேடி பிடித்து கதை கேட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் அவரது அடுத்த படத்திற்கான தகவல்கள் வெளியிடப்படும் என தெரிகிறது

9979 total views