நடுரோட்டில் போலீஸாரை தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து தாக்கிய ஜூலி! இப்படியெல்லாம் கூடவா இருக்காங்க

Report

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இருந்து பிரபலமானவர் ஜூலி. அதன் பின்பு பிக்பாஸில் கலந்து கொண்டு தற்போது ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்தும் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது ஆண் நண்பர்களுடன் வேப்பேரியில் காரில் சென்றுள்ளார். பிறகு சாலையின் குறுக்காக வண்டியை நிறுத்திவிட்டு பேசி கொண்டிருந்துள்ளனர்.

அப்போது அந்த வழியாக மப்டியில் வந்த காவல் நிலைய தலைமை காவலர் பூபதி, கார் சாலையில் குறுக்கே நிறுத்தியுள்ளதை பார்த்து ஜூலி மற்றும் அவரது ஆண் நண்பர்களை திட்டியுள்ளார். இதில் கோபமான அவர்கள் மேலும் சிலரை அந்த இடத்திற்கு அழைத்து பூபதி போலீஸார் என அறியாமல் அவரை தாக்கியுள்ளனர்.

மேலும் பூபதியும் உதவிக்கு சில போலீஸாரை அழைக்க அந்த இடமே கலவரமானது. இந்த சம்பவத்தினால் இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

10113 total views