கஸ்தூரி போல நான் ஆபாசமாக நடிக்கவில்லை! முகத்தில் அடித்தது போல பேசிய பிரபல நடிகை

Report
526Shares

நடிகை கஸ்தூரி சமூக வலைதளங்களை எதையாவது கருத்துக்களை சொல்லி சர்ச்சையில் சிக்குவது வழக்கமான ஒரு விசயம் தான். அண்மையில் நடந்த ஐபிஎல் சென்னை கொல்கத்தா கிரிக்கெட் போட்டி பற்றி அவர் "என்னய்யா இது பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க சிஎஸ்கே" என டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் நடிகை லதா இதை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் எம்.ஜிஆரையும், என்னையும் தவறாக சித்தரித்து கருத்து பதிவிட்ட நடிகை கஸ்தூரிக்கு முதலில் என் கண்டனத்தை தெரிவிக்கிறேன். நான் 50 ஆண்டுகளாக நடித்து கொண்டிருக்கிறேன். இப்போது வரைக்கும் எனக்கு என்று ஒரு மரியாதையை தக்க வைத்து கொண்டிருக்கிறேன். எம்.ஜி.ஆரை. தெய்வமாக மதிக்கிற கோடானுகோடி ரசிகர்கள், தமிழ்நாட்டுல இருக்காங்க. அவங்களையெல்லாம் ஒட்டு மொத்தமாக மன வருத்தப்படுற மாதிரி இப்படியெல்லாம் எழுதலாமா.?

கஸ்தூரி நடிச்ச அளவுக்கெல்லாம் நான் எந்தப் படத்துலேயும் விரசமா நடிக்கலையே. அவங்களுக்கு கருத்துச் சொல்ல ஒரு விஷயம் தேவைப்பட்டா, அவங்க நடித்த படத்துல இருந்தே சொல்லியிருக்கலாமே. எதுக்கு நானும், எம்.ஜி.ஆர்., நடித்த படத்தை சொல்லணும்.

இதெல்லாம் பெண்ணியம் பேசுறவங்க பேச்சா. ஒரு பொண்ணே, இன்னொரு பொண்ணை பொதுவெளில அவமானப்படுத்துகிற மாதிரி பேசலாமா.? கஸ்தூரிக்கு பப்ளிசிட்டி வேணும் என்றால் வேற எதையாவது செய்யலாம். இது அந்தப் பொண்ணுக்குத் தேவையில்லாத வேலை. இதுவொரு சீப்பான பப்ளிசிட்டி. அனைத்து எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்களிலும் இருந்து கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள் என அவர் கூறியுள்ளார்.

22222 total views