நடிகை சமந்தா தற்போது சோலோ ஹீரோயினாக வலம் வர தொடங்கிவிட்டார். அவரின் நடிப்பில் அண்மையில் வெளியான ஓ பேபி படம் ஹிட்டாகி நல்ல வசூல் செய்தது.
இப்படத்தை தமிழிலும் வெளியிட முடிவுசெய்துள்ளார்கள். அவர் தற்போது 96 படத்தின் தெலுங்கு மறு ஆக்கத்தில் திரிஷா கேரக்டரில் நடித்து வருகிறார். 2017 ல் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்ட அவர் தற்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
இதனால் அவர் கையில் இருக்கும் படத்தை முடித்துவிட்டு 1.1/2 வருடங்கள் ஓய்வெடுக்க முடிவெடுத்துள்ளாராம். சினிமாவுக்கு பிரேக் கொடுக்கும் அவரின் இந்த முடிவு ரசிகர்களுக்கு ஷாக்காக தான் இருக்கிறது.