பிக்பாஸ் மீரா செய்த கேவலமான செயல்! போலிஸில் புகார் - நடந்தது என்ன?

Report
229Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட 16 வது போட்டியாளர் மீரா மிதுன். அங்கு செல்லும் முன் அவர் மீது மாடலிங்க் துறையில் பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

பிக்பாஸ் வீட்டிலும் அவரின் நடத்தைகள் பலருக்கும் பிடிக்கவில்லை. இதனால் அவரை கார்னர் செய்து நாமினேட் செய்தார்கள். ஓட்டுக்களும் கிடைக்காமல் வீட்டை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் அவர் மீது அவரின் முன்னாள் உதவியாளர் வெங்கட் என்பவர் புகார் அளித்துள்ளார்.

இதில் அவர் மீராவுக்காக தான் பிக்பாஸ்க்கு முன்பும், பின்பும் வேலை செய்ததாகவும், அவர் தனக்காக வேலை செய்ய ஒரு குழுவை பணியில் அமர்த்தியதாகவும் ஆனால் அவர்களுக்கு உரிய சம்பளத்தை கொடுக்கவில்லை என கூறியுள்ளார்.

மேலும் அவர் மீரா தான் பெண் என்பதால் அவரை அனைவரும் மிரட்டுவதாக கூறி என்னிடம் உதவி கேட்டார், நான் என் நண்பர்களுடனும், வழக்கறிஞர் மூலமாக அவருக்கு வழக்குகளில் வாதாடினோம்.

அவருக்கான வெளியே சென்றாலும், படப்பிடிப்புகளுக்கும் கார் ஏற்பாடு செய்வது, சாப்பாடு என செய்துகொடுத்தோம். அவர் நாம் நிர்வாகமாக பணியாற்றுவோம், பின்னர் சம்பளம் கொடுப்பதாக வாக்கு கூறினார்.

ஆனால் இன்றளவிலும் அவர் எங்களுக்கு எந்த பணமும் கொடுக்கவில்லை. நான் போலிசில் புகார் அளித்துள்ளேன். ஊடகத்தின் முன் பேச தயாராக உள்ளேன் என கூறியுள்ளார்.

10112 total views