நடிகை சமந்தாவுக்கு இன்னொரு கணவர்! அது இவர் தானாம்! வறுத்தெடுத்த ரசிகர்கள்!

Report
183Shares

நடிகை சமந்தா மற்ற நடிகைகளிடம் இருந்து சற்று வித்தியாசமானவர் என சொல்லலாம். ஏனெனில் அவர் நடிகை என்றால் கிளாமராக ஹீரோவுடன் நடனமாடுவது என்பதை உடைத்து கதைக்கும் கதாப்பாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்தவர்.

திருமணத்திற்கு பின்னும் நடிப்பு, சொந்த வாழ்க்கை இரண்டையும் அழகாக கொண்டு செல்கிறார்கள். அண்மையில் தெலுங்கில் வந்த அவரின் படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றன.

சமூகவலைதளங்களில் அடிக்கடி தன் புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது அவரின் செல்லப்பிராணியான ஹாஷ் என்ற நாயின் புகைப்படத்தை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

அண்மையில் அந்த நாயின் கழுத்தில் நம்பர் 1 கணவர் என டேக் போட்டிருந்த புகைப்படத்தை வெளியிட கணவர் நாக சைதன்யாவின் ரசிகர்கள் கோபமடைந்தனர்.

அதே வேளையில் சமந்தா ரசிகர்கள் விடாமல் ஹாஷ் பற்றி கேள்வி கேட்டு வருகிறார்களாம். புகைப்படத்தை வெளியிட கோரி வருகிறார்களாம். மறுபக்கம் இந்த புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கான லைக்ஸ் குவிந்து வருகிறது.